Ticker

6/recent/ticker-posts

Meta அறிமுகம் செய்த AI Agent: இனி உங்கள் பிசினசை WhatsApp பார்த்துக்கொள்ளும்


பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் அடிக்கடி புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இப்போது, ​​அது வணிகப் பயனர்களுக்காக ஒரு முக்கிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதுதான் "மெட்டா பிசினஸ் ஏஜென்ட்".

Meta அறிமுகம் செய்த AI Agent: இனி உங்கள் பிசினசை WhatsApp பார்த்துக்கொள்ளும்

உலகில் உள்ள மக்களின் கையில் உள்ள ஆறாவது விரலாக மொபைல் போன் மாறியுள்ளது என்று கூறினால், அந்த மொபைல் போனின் மூச்சாக இருப்பது வாட்ஸ்அப். மிக அதிக அளவிலான பயனர்களின் பல வித பயன்பாடுகளில் இது உதவுகிறது. பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் அடிக்கடி புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இப்போது, ​​அது வணிகப் பயனர்களுக்காக ஒரு முக்கிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதுதான் "மெட்டா பிசினஸ் ஏஜென்ட்". 


மெட்டா பிசினஸ் ஏஜென்ட்

மெட்டா பிசினஸ் ஏஜென்ட் என்ற இந்த AI கருவி எந்தக் கட்டணமும் இன்றி 24/7 செயல்பட்டு, வாடிக்கையாளர் கேள்விகளுக்குப் பதிலளித்து, வணிகச் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

WhatsApp Business AI Agent: வணிகர்களுக்கு ஜாக்பாட்

மும்பையில் நடைபெற்ற வாட்ஸ்அப்பின் மூன்றாவது வருடாந்திர வணிக மாநாட்டில் இந்த அம்சம் அறிவிக்கப்பட்டது. இதன் முக்கிய நன்மைகள் இதோ:

நீங்கள் ஒரு வணிகத்தை நடத்தும் நபராக இருந்தால், வாட்ஸ்அப்பில் உங்களுக்கென ஒரு AI ஏஜென்ட்டை அமைத்துக் கொள்ளலாம். 

உங்கள் கேடலாக், இணையதளம், வணிக ப்ரொஃபைல் மற்றும் செயல்படும் நேரம் போன்ற தகவல்களைப் பயன்படுத்தி, இந்த AI வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, ஒப்பந்தங்களை இறுதி செய்ய உதவும். 

மேலும், தேவைப்படும்போது மனித ஏஜென்ட்கள் உரையாடலைத் தொடரலாம்.

இந்த வசதி இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்குமா?

இந்த அம்சம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. ஆம் என்பதே பதில்! மெட்டா இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இருப்பினும் முழுமையான வெளியீடு இன்னும் நிலுவையில் உள்ளது. தற்போது, ​​இந்த அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்குக் கிடைக்கிறது. உங்களுக்கு இன்னும் அணுகல் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் காத்திருப்புப் பட்டியலில் சேரலாம்.

இந்த AI ஏஜென்ட் எப்படி வேலை செய்கிறது?

இந்த AI ஏஜென்ட்டை செட் செய்வது மிகவும் எளிது:

முதலில் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில் உள்ள "டூல்ஸ்" (Tools) பகுதிக்குச் செல்ல வேண்டும்.
AI ஏஜென்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வெண்டும்.
அதன் பிறகு, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பயனர்கள் இதை எப்படி பயன்படுத்துவது?

வணிக உரிமையாளர்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், மாதிரி பதில்கள் மற்றும் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகள் பற்றிய விவரங்களைப் பதிவேற்றி, சிறந்த பதில்களை வழங்க AI-க்கு பயிற்சி அளிக்கலாம். மேலும், AI எப்போது பதிலளிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

உதாரணமாக, அனைத்து புதிய உரையாடல்களுக்கும் பதிலளிக்க வெண்டுமா அல்லது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் வழியாக வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டுமா என நாம் தீர்மானிக்கலாம்.

எந்தவொரு உரையாடலிலிருந்தும் AI-ஐ எந்த நேரத்திலும் நீங்கள் அகற்றலாம் அல்லது அதன் மியூட் செய்யலாம். ஒரு வாடிக்கையாளர் சிக்கலை எதிர்கொண்டால், AI வணிக உரிமையாளருக்குத் தெரிவிக்கும். அதன் பிறகு, உரிமையாளர் தலையிட்டு அந்த உரையாடலைக் கையாள முடியும்.

கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்

AI-ஐ மேம்படுத்துவதற்காக இந்த உரையாடல்களில் இருந்து வரும் செய்திகள் சேகரிக்கப்படலாம். இருப்பினும், நிறுவனம் இந்த AI ஏஜென்ட்டை நீக்கினால், புதிய உரையாடல்கள் பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாது.

இந்த AI ஏஜென்ட்டை இயக்கிப பிறகு, பிராட்காஸ்ட் பட்டியல்கள் (Broadcast List), மறையும் செய்திகள் (Disappearing Messages), மற்றும் வாழ்த்து செய்திகள் (Greeting Messages) போன்ற சில தற்போதைய அம்சங்கள் பாதிக்கப்படக்கூடும். இதை முதல் முறையாக இயக்கும்போது, ​​தற்போது இணைக்கப்பட்டுள்ள உங்கள் சாதனங்களின் இணைப்பும் துண்டிக்கப்படும்.

கூடுதலாக, பெரிய நிறுவனங்களுக்காக Meta நிறுவனம் Meta Business Agent தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிறுவனங்கள் AI ஏஜென்ட்களைப் பெரிய அளவில் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது. OpenAI அல்லது Anthropic போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் மாதிரிகளைப் போலவே, Meta இந்தச் சேவைக்கு ஒரு டோக்கனுக்கு ஒரு கட்டணம் வசூலிக்கும். சிறு வணிகங்களுக்கு இந்தச் செயலி இலவசமாகவே உள்ளது.

zeenews


 


Post a Comment

0 Comments