
2026 ஆம் ஆண்டின் அரசாங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) 49 மற்றும் 54 ஆசனங்களைக் கொண்ட 600 புதிய ‘Standard’ ரகப் பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டத்திற்காக 14,400 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த திட்டத்தின் கீழ், பயணிகள் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகள் பாதுகாப்பான வாகனங்களாகக் அடையாளங்காணப்பட்டு, நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரச் சேவைகளுக்குப் பொருத்தமான பேருந்து வகைகள் மற்றும் அவற்றின் குறைந்தபட்ச விவரக்குறிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விவரக்குறிப்புகளுக்கு அமைய, நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரச் சேவைகளுக்காக ‘Deluxe’ ரக (குளிரூட்டப்பட்ட) பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்ட 600 ‘Standard’ ரக புதிய பேருந்துகளுக்குப் பதிலாக, அதிக வசதிகளைக் கொண்ட ‘Deluxe’ ரக (குளிரூட்டப்பட்ட) பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments