
இன்னா நாற்பது - 17.
ஆன்றவிந்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.
விளக்கம்:
- அறிஞர்கள் நிறைந்த ஒரு கூட்டத்திற்கு அறிவில்லாத ஒருவன் செல்வது துன்பமாகும்.
- இருள் நிறைந்திருக்கும் வேளையில் பயணிப்பது துன்பமாகும்.
- துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு வாழாதவர்களின் நோன்பு துன்பமாகும்.
- பெற்ற தாயைக் காப்பாற்றாமல் விட்டு விடுவது துன்பமாகும்.
இன்னா நாற்பது - 18.
உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர் தொடர்பு.
விளக்கம்:
- உறுதி படைத்தவர்கள் மனம் உடைந்து போவது துன்பமாகும்.
- வீரம் நிறைந்தவர்கள் உடன் இருப்பவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போவது துன்பமாகும்.
- கடினமான காட்டுப் பாதையில் செல்வது துன்பமாகும்.
- மன முதிர்ச்சி இல்லாதவர்களுடனான தொடர்பு துன்பமாகும்.
( தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments