Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-124


தான் மணமுடித்ததும் தனக்குக் கிடைக்க விருக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அதற்கு “செக்கோவ்” என்று பெயரிடுமாறு தந்தை தன்னிடம் வேண்டிக் கொண்டதை செரோக்கி  ஒருபோதும்  மறந்துவிடவில்லை. 

“செக்கோவ்” - செரோக்கிய மக்களால் போற்றப்பட்டு வந்த ஓர் அறிவாளி! செரோக்கிய மொழிக்கு எழுத்துரு கண்டுபிடித்துத் தந்தவர்!

அவனது தந்தை வெளிப்படுத்திய வரலாற்றுப் பதிவுகளை அவன் ரெங்க்மாவிடம் அப்போதே ஒப்புவித்திருந்தான்! தந்தையின் வேண்டு கோளை  அவளும் ஆகர்சித்தவளாக, தனக்கு ஆண் குழந்தையே பிறக்க வேண்டுமென்று எப்போதும் பிரார்த்திக்கலானாள்! 

இப்பொழுது மருத்துவச்சி இலை கிழித்துத் தனக்குக் கிடைக்க விருப்பது  ஆண் குழந்தை என்று குறிப்பிட்டதும் அவளது  மகிழ்ச்சி பன்மடங்கானது. எப்போதும் மூத்தவர்களின் எண்ணங்களுக்கு மறுப்புக்கூறாத நற்பண்பு கொண்டவள் ரெங்க்மா. அன்றொருநாள் மரமேடையில் அவன் அவளை வாரியணைத்துக் கொண்டபோது தொடங்கிய  அவர்களது வாழ்க்கைச் சக்கரத்தின் நற்பலனை இன்று மருத்துவச்சியின் வாய்மொழியில் கேட்டதில் அவனும் உவகை மிகக்கொண்டான்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments