
தேவையான பொருட்கள்
10 வெண்டைக்காய்கள்
5 சிறிய வெங்காயம்
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி சீரகம்
2 பச்சை மிளகாய்
½ எலுமிச்சம்பழம் (சாறு)
1 கைப்பிடி கறிவேப்பிலை
3 பல் பூண்டு
3 கைப்பிடி துருவிய தேங்காய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு மஞ்சள்தூள்
தாளிக்கத் தேவையான அளவு எண்ணெய்
விருப்பத்திற்கு: அஜினோமோட்டோ அல்லது கூனிக் கருவாடு சிறிதளவு சேர்த்தும் சமைக்கலாம்.செய்முறை
வெண்டைக்காயைக் கழுவி நன்றாகத் துடைத்து, வாழைப்பூ நறுக்குவது போல் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பூண்டு, சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பின் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். விருப்பமுள்ளவர்கள் இந்த நிலையில் அஜினோமோட்டோ அல்லது கூனிக் கருவாடையும் சேர்க்கலாம்.
இறுதியாக அடுப்பை அணைத்த பிறகு நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே பரிமாறவும்.
குறிப்பு: வெண்டைக்காயை அடுப்பை அணைத்த பிறகே சேர்ப்பதால் அதன் வழுவழுப்புத் தன்மை குறைந்து, சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய எளிய மற்றும் சத்தான உணவு இது.
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments