Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-49


குறள் 240
:

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பழியற்ற வாழ்க்கையே வாழ்க்கை, புகழின்
ஒளியற்ற வாழ்க்கை இருள்.

அருளுடைமை

குறள் 241:

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முன்

பெருஞ்செல்வம் இழோ ரிடத்திலும் உண்டு!
அருட்செல்வம் ஒன்றே சிறப்பு.

குறன் 242:

நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃ்தே துணை

பல்வழியில் ஆய்ந்தாலும் வாழ்வில் அருளுடைமை
நல்லதுணை என்றேதான் சொல்.

குறள் 243:

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

அருள்மனம் கொண்டோர் அறியாமைத் துன்ப
இருளுலகில் வாழமாட்டார் சொல்.

குறள் 244:

மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்லுபி ரஞ்சும் வினை.

இங்கே உயிரினத்தைக் காக்கும் கருணைகொண்டோர்
தன்னுயி  ரஞ்சமாட்டார் சாறிறு ..

(தொடரும்)


 


Post a Comment

0 Comments