Ticker

6/recent/ticker-posts

தென்கொரியாவில் 200 ஆண்டுகளில் காணாத மழை


தென்கொரியாவின் கியோஜே (Geoje) பகுதியில் 200 ஆண்டு காணாத அளவு மழை பெய்திருக்கிறது.

கியொங்சாங் (Gyeongsang) மாநிலத்தில் நேற்று மட்டும் 600 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது.

தென்கொரியா 1972 இல் மழை பெய்வதைக் கணக்கெடுக்கத் தொடங்கியதிலிருந்து அதுவே ஆக அதிகமான மழை.

கியோஜே நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது பெருமளவு மண் சரிந்து விழுந்தது. அதில் ஒருவர் மாண்டார்.

நகரின் முண்டோங் (Mundong) நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாடவும், வாகனங்களை ஓட்டிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துச் சேவைகளும் தற்காலிமாக முடக்கப்பட்டுள்ளன.

சுமார் 3,500 வீடுகள், நிறுவனங்களில் மின்சாரம் இல்லை.

20க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக மீட்புப்பணியாளர்கள் கூறினர்.

இதற்கு முன்னர் பல வாரங்களாக அனல் பறக்கும் வெப்பமும் வறட்சியும் தென்கொரியாவை வாட்டி வதைத்தது. அதற்கு நேர்மாறாக இப்போது மழை கொட்டித் தீர்க்கிறது.

seithi


 


Post a Comment

0 Comments