Ticker

6/recent/ticker-posts

ஹாங்காங்கில் ஐந்து வயது மகனைத் துன்புறுத்தி, பட்டினிபோட்டுக் கொன்ற பெண்ணிற்கு 22 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தாயின் வயது 37.

2022இல் சிறுவன் மாண்டான்.

இறந்தபோது அவனுடைய எடை வெறும் 9.7 கிலோகிராம்.

அவனுடைய இரண்டு வயதில் இருந்த எடையைவிட அது நான்கு கிலோகிராம் குறைவு.

சிறுவனின் உறுப்புகளும் தசைகளும் வலுவிழந்திருந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.

அவன் அதிகக் காலம் பட்டினிபோடப்பட்டிருக்கலாம் என்பதை அது காட்டியது.

சிறுவனைத் தாய் பலமுறை அடைத்து வைத்ததாகவும் பிரம்படி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனையின்போது அவனது உடலில் 129 வடுக்கள் இருந்தன.

இது மிகவும் கொடூரமான, மனத்தை வாட்டும் சம்பவம் என்று நீதிபதி கூறினார்.

சமூக ஊழியர்கள் பலமுறை அந்த வீட்டிற்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடைசியாக சிறுவன் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சோதனை நடந்தது.

ஊழியர்கள் சிறுவனின் வழக்கத்திற்கு மாறான எடையையும் உயரத்தையும் கவனிக்காததைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார் நீதிபதி.

பெண்ணின் மற்ற மூன்று பிள்ளைகள் வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்பில் விடப்பட்டிருக்கின்றனர்.

seithi


 


Post a Comment

0 Comments