Ticker

6/recent/ticker-posts

சிறுமிக்கு படுகாயங்களை ஏற்படுத்திய மொட்டு கட்சியின் அமைப்பாளர் கைது; விளக்கமறியலில் வைப்பு!


14 வயதுடைய சிறுமிக்கு தீவிர பாலியல் துஷ்பிரயோகம் இழைத்த சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய வடக்கு பிரிவின் பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியின் அமைப்பாளரும், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டவருமான சுவஹஸ் நிசல என்பவர் நிகவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அச்சிறுமி தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில், அவருக்குப் பாதுகாப்பான இடம் தருவதாகக் கூறி சந்தேகநபர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் இது குறித்து அச்சிறுமி தனது தாயாரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து, அவர்கள் நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சட்ட மருத்துவ அதிகாரியால் (JMO) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமி அனைத்து விபரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை பொலிஸார் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

lankatruth


 


Post a Comment

0 Comments