
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 25 பேருக்கு எதிரான விசாரணை நிறைவடைந்துள்ளதுடன், அதன் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என கொழும்பு விசேட த்ரிபுத மேல்நீதிமன்றம் இன்று (24) தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கின் பிரதிவாதிகளின் வாய்மொழி வாதங்கள் இன்று மாலை 6.00 மணியளவில் நிறைவடைந்துள்ளதுடன், இரு தரப்பினரதும் எழுத்துப்பூர்வ வாதங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு விசேட த்ரிபுத மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான சுஜீவ நிஷங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் முறைப்பாட்டாளரின் விசாரணைப் பணிகள் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் நிறைவடைந்திருந்தன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments