
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலில் இருந்து, சுமார் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள மிகப்பாரிய அளவிலான சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய எடைக் கொண்ட சிறுநீரகக் கற்களில் ஒன்றாகக் கருதப்படும் இச்சாதனைச் சத்திர சிகிச்சையானது, திருகோணமலை பொது வைத்தியசாலையின் விசேட மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய திறமையான மருத்துவக் குழுவினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடலுக்குள் இவ்வளவு பாரிய எடையில் கல் உருவான போதிலும், நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் வகையில் துரிதமாகச் செயற்பட்டு வெற்றிகரமாக அதனை அகற்றிய மருத்துவக் குழுவினருக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments