
24 மணி நேரமும் வேலை செய்யும் நம் மூளையில்...
Metabolic waste எனப்படும் தேவையற்ற கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன.
அந்தக் கழிவுகளை எவ்வாறு நம் மூளை வெளியேற்றுகிறது?
சுமார் 250 ஆண்டுகளாய்த் தொடரும் அந்தக் கேள்விக்கு விடை கண்டறிந்துள்ளனர் தென் கொரிய ஆய்வாளர்கள்.
மூளையின் பாதுகாப்புச் சவ்வில் (Brain's protective membrane) சிறு திறப்புகள் உள்ளன.
அவற்றின் வழி cerebrospinal fluid (செரெபிரொஸபைனல்) எனும் திரவம் லிம்ஃபாதிக் (Lymphatic) நாளத்தின் வழி செல்கிறது.
மூக்கு, கண்கள் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் அத்திரவம் இறுதியாக நம் கழுத்தில் இருக்கும் லிம்ஃ நோட்ஸ்ஸை (lymph nodes) அடைகிறது.
அந்தச் செயல்முறை, தீங்கு விளைவுக்கும் புரதங்களை நம் மூளையிலிருந்து வெளியேற்றுகிறது
Alzheimer's (அல்ஸைமர்ஸ்) எனும் மறதி நோய்க்குத் தொடர்புடைய தீங்கு விளைவிக்கும் புரதங்களையும் அது வெளியேற்றுகிறது.
ஆனால் வயது அதிகரிக்க அந்தச் செயல்முறை மெதுவடைகிறது.
அதனால் மறதி நோய் அபாயம் அதிகரிக்கிறது.
செரெபிரொஸபைனல் திரவம் மேம்பட்ட முறையில் செயல்பட, ஆய்வாளர்கள் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
கண்கள், மூக்கு, கழுத்துப் பகுதிகளைச் சுற்றி மென்மையாக அழுத்திப் பிடித்துவிட்டால் (Facial massage) மூளைக் கழிவுகள் சீக்கிரமே வெளியேற்றப்படுகின்றன.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுயமாகவே எளிதில் முகத்தை பராமரித்துக் கொள்ளலாம் என்றும் மருத்துவர் பகிர்ந்துகொண்டார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments