Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 9


இன்னா நாற்பது - 15.

புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா வாங்கின்னா 
பல்லாரு ணாணப் படல்.

விளக்கம்: 
  • புல்லை உண்டு வாழும் குதிரையின் வருகையைத் தெரிவிக்கும் மணியை மாட்டாமல் ஏறிச் செல்வது துன்பமாகும். 
  • கல்வியறிவில்லாதவர் கூறும் ஆலோசனையின் பயன் துன்பமாகும். 
  • பொருளில்லாதவர்கள் தகுதிக்கு மேலாக விருப்பப் படுவது துன்பமாகும். 
  • பலரது முன்பு மானக் கேடு ஏற்பட்டு நாணப் படுவது துன்பமாகும்.

இன்னா நாற்பது - 16.

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான் செய்யுங் கணக்கு.

விளக்கம்:
  • உண்ணாமல் கொள்ளாமல் பொருள் சேர்த்து வைத்திருப்பது துன்பமாகும்.
  • ஒத்த கருத்து இல்லாத பகைவர் சேர்க்கை துன்பமாகும். 
  • பார்வையில்லாத ஒருவனது பேரழகு துன்பமாகும். 
  • கணக்கறிவில்லாதவன் போடும் திட்டங்கள் துன்பமாகும்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments