Ticker

6/recent/ticker-posts

சீனாவில் தென்பட்ட உலகின் மிகச்சிறிய வாத்து வகை... ஆச்சர்யத்தில் மக்கள்!


சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் முதல்முறையாக உலகின் மிகச் சிறிய வாத்து வகையான காட்டன் பிக்மி கூஸ் தென்பட்டுள்ளது.

காட்டன் டீல் என்றழைக்கப்படும் காட்டன் பிக்மி கூஸ் வாத்துகள்தான், உலகில் மிகச் சிறிய வாத்து வகையாகும். இவ்வகை வாத்துகள் அதிகபட்சம் 30 சென்டிமீட்டர் நீளம்தான் வளரக்கூடியவை ஆகும். இவற்றின் குட்டிகள் மிகச் சிறியனவாக இருக்கும். இவை பொதுவாக, ஆறுகள், குளங்கள், குட்டைகள், சதுப்பு நிலங்களில் தங்கி வாழக்கூடியவை.

இவை சிறு அரும்புகள், தண்டு, சிறிய மீன்களைத் தின்று வாழ்பவை ஆகும். அண்மைக் காலமாக இவை தென்படாமல் இருந்த நிலையில் சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் ஹெங்ஷுய் ஏரியில் குட்டி காட்டன் பிக்மி கூஸ் தென்பட்டது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் முதல் முறையாக இந்த வாத்து தென்பட்டுள்ளது. ஹெங்ஷுய் ஏரியை சீன அரசு தொடர்ந்து சீரமைத்து வரும் நிலையில் அங்கு மட்டும் 337 ரக பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

news18


 


Post a Comment

0 Comments