
கோக், ஸ்பிரைட், இனிப்பான பழங்கள்...
இவை 101 வயது லூ ஷிஸெங்கின் (Lu Shizeng) விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சீனாவின் ஸெஜியாங் (Zhejiang) மாநிலத்தைச் சேர்ந்த அவர் தமது உணவுப்பழக்கத்தால் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஐந்து நாள்களுக்கு ஒருமுறை சந்தைக்குச் செல்லும் திரு லூ மீன், இறால், நண்டு, பன்றி இறைச்சி, காய்கறிகளை வாங்கிவருகிறார்.
அவருக்கு நல்ல பசி இருப்பதாகப் பராமரிப்பாளர் கூறுகிறார்.
ஒரே வேளையில் ஒரு தட்டு நண்டையும் அவர் சாப்பிட்டு முடித்துவிடுவாராம்.
கோக், ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்களையும் திரு லூ விரும்புவதாக South China Morning Post நாளேடு குறிப்பிட்டது.
குறிப்பாகச் சில துளி மதுபானம் கலந்த குளிர்ந்த ஸ்பிரைட் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.
தூக்கத்திலும் அவர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார்.
மாலை 5 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, இரவு 8 மணியளவில் தூங்குகிறார்.
அதிகாலை 4 மணிக்கு விழித்துக்கொள்ளும் அவர் நண்பகலிலும் சிறிது நேரம் தூங்குகிறார்.
தமக்கு அரிதாகவே சளி பிடிப்பதாகவும் நினைவாற்றல் இன்னமும் நன்றாக இருப்பதாகவும் திரு லூ பெருமையுடன் கூறுகிறார்.
அவரது நீண்ட ஆயுளின் ரகசியம் என்னவாக இருக்கும் என்று இணையவாசிகள் ஆர்வத்துடன் விவாதித்து வருகின்றனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments