Ticker

6/recent/ticker-posts

சாமானியர்களின் தளம்; சாதனைப் பத்திரிகை! 'வேட்டை'யின் உலகளாவிய டிஜிட்டல் முத்திரை!


வேட்டை தனது 10வருடத்தை பூர்த்தி செய்து 11வது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இது ஒரு சாதாரண சாதனையாக பிரித்துப் பார்க்க முடியாது.

இது ஒரு மிகப்பெரும் சாதனை.

சாதாரண ஒரு blogger உலகத் தரம் வாய்ந்த ஒரு செய்திப் பத்திரிகையாக மாறியிருப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.

முதற்கண் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொழுதுபோக்கு பிளாக்கிங் அல்ல; பொறுப்பான ஊடகவியல்!

மற்ற செய்தி வலைப்பதிவுகள் எப்போதாவது ஒருமுறை தகவல்களைப் பதிவிடும் சூழலில், வேட்டை இதழ் முற்றிலும் மாறுபடுகிறது. ஒரு பாரம்பரிய நாளிதழுக்குரிய அனைத்துக் கட்டுப்பாடுகளுடனும், பிரத்யேக ஆசிரியர் குழுவின் (Editorial Team) கண்காணிப்புடனும் இது இயங்குகிறது.

முறையான செய்திப் பிரிவுகள்: 

உலகச் செய்திகள், உள்ளூர் விவகாரங்கள் முதல் சிறப்பு ஞாயிறு மலர் வரை அனைத்தும் திட்டமிட்ட பக்கங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி: 

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளைத் தவிர்த்து, சரிபார்க்கப்பட்ட உண்மையான செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும் நம்பகத்தன்மை.

புதிய படைப்பாளிகளின் களம்: 

சாதாரண வாசகர்களையும் சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளர்களாக மாற்றும் ஒரு திறந்தவெளிப் பாசறை.

எளிய தொழில்நுட்பம்; அசாத்தியமான இலக்கு!

மிகக் குறைந்த இணைய வேகத்திலும் (Low Internet Speed) மிக வேகமாகத் திறக்கும் தொழில்நுட்ப நேர்த்தி, விளம்பர நெரிசல்கள் இல்லாத தூய்மையான வாசிப்புத் தளமாக வேட்டை இதழை மாற்றியுள்ளது. உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை, அவர்களின் மொபைல் திரையிலேயே தினசரிச் செய்திகளோடு சென்றடைகிறது இந்தத் தளம்.

தமிழ் டிஜிட்டல் உலகில் ஒரு புரட்சிகரமான செய்திப் பத்திரிகையாக வலம் வரும் 'வேட்டை'யின் பயணம் தொடர வாழ்த்துகள்!

முஹம்மது அஸீம் 
இலங்கிலாந்து 


 


Post a Comment

0 Comments