
ஜப்பானில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆண்கள் பலரும் அழகு நிலையத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜப்பானில் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு மேல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வெப்பத்தில் இருந்து தப்பிக்க பல்வேறு நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஆடை விவகாரங்களில் தளர்வுகளை அளித்துள்ளன. இதனால், கோட்-ஷுட்டுக்குப் பதில் பலரும் டி-ஷர்ட், டிரவுசருடன் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம் அழகு நிலையத்தை நோக்கி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் விஷயம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முகத்தை அழகுபடுத்துவதற்குப் பதில் அவர்கள் கை, கால் மற்றும் உடலை தூய்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக உடலில் உள்ள முடிகளை நவீன டிரிம்மர் கருவி மூலம் அகற்றி வருகின்றனர்.
இதன் மூலம் அதிகம் வியர்வை ஏற்படுவதைத் தடுப்பதுடன், உடலையும் சுத்தமாக வைத்திருக்க உதவுவதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். அழகு நிலையத்தில் ஏராளமானோர் குவிவதால் முன்பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments