Ticker

6/recent/ticker-posts

சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!


தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை மதிக்காமல், அமைச்சர் நிர்மல் குமார் நாகரீகமின்றி பேசி வருவதைக் கண்டித்து தி.மு.க சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் சிவகங்கை நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “ஒன்பது கட்சிகள் மாறிய அரை டவுசர் நிர்மல் குமார் அவர்களே... நாவடக்கத்துடன் கண்ணியமாகவும், நாகரீகமாகவும் சட்டமன்றத்தில் பேசுங்கள்” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

த.வெ.க அரசின் மீதான மக்களின் புகார்களை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எடுத்துரைக்கும்போது, அதற்கு ஆக்கப்பூர்வமான விடைகளை அளிப்பதுதான் மரபாக இருந்து வருகிறது.

ஆனால், மரபையும், மாண்பையும் புறந்தள்ளி அவதூறு பேச்சுக்களை நாகரீகமற்ற வகையில் அவிழ்த்துவிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார் நிர்மல் குமார்.

அதன் காரணமாகவே, அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்றத்தில் பொறுப்புடன் கண்ணியமாக பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

சிவகங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

kalaignarseithigal


 


Post a Comment

0 Comments