
பூமிக்கு ஏதேனும் பேரழிவு ஏற்படும் பட்சத்தில், மனிதர்கள் உயிர் வாழ மிகவும் பாதுகாப்பான நாடாக ஆஸ்திரேலியா இருக்கும் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
ஜெர்மனியின் ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி புளோரியன் அல்ரிச் ஜெஹ்ன் (Florian Ulrich Jehn) தலைமையிலான குழுவினர், 'க்ளோபல் சேலஞ்சஸ்' (Global Challenges) இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அணுஆயுதப் போர், விண்கல் தாக்குதல், எரிமலை வெடிப்பு, கொடிய நோய்த்தொற்றுகள், காலநிலை மாற்றம் மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற பெரிய ஆபத்துகள் உலகைத் தாக்கும் போது, உலகின் பிற பகுதிகளை விட ஆஸ்திரேலியா குறைந்த அளவே பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
பூமியில் எந்தவொரு இடமும் அனைத்து வகையான ஆபத்துகளில் இருந்தும் முற்றிலும் விலகி 100% பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற போதிலும், ஒட்டுமொத்த ஒப்பீட்டில் ஆஸ்திரேலியாவே மிகவும் வலுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட (Resilient) நாடாகத் திகழ்கிறது.
இவ்வாய்வில் விஞ்ஞானிகள் உலகளாவிய பேரழிவுகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அதாவது, அணுப்போர் அல்லது விண்கல் வீச்சினால் ஏற்படும் தூசி மேகங்களால் சூரிய ஒளி மறைக்கப்படுவது, மின்சாரம், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி முடங்குவது, கண்டங்கள் அளவில் பெருமளவில் மனிதர்களைப் பலிவாங்கும் நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படும் சூழல்களில் ஒரு நாடு தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தனிமைப்படுத்தப்பட்ட புவியியல் அமைப்பு, வலுவான ஜனநாயகம், சொந்தமாக உணவு மற்றும் தொழில் உற்பத்தி திறன் ஆகியவை தேவைப்படுகின்றன.
ஆஸ்திரேலியா ஒரு தனித்தீவாக இருப்பதால் எல்லைகளை எளிதில் மூட முடியும்; மேலும் அங்கு அதிகளவில் உணவு உற்பத்தி, சுரங்கம் மற்றும் தொழில்வளம் இருப்பதால் அது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் பாதுகாப்புப் பட்டியலில் அடுத்தடுத்த
இடங்களைப் பிடித்துள்ளன.
இருப்பினும், சுவிட்சர்லாந்தைத் தவிர மற்ற நாடுகளுக்கு நீண்ட கடற்கரைகள் இருப்பதால் சுனாமி ஆபத்துகளும், எரிமலை வெடிப்பு அச்சங்களும் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments