Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஜனாதிபதிக்கு உயிரச்சுறுத்தல்..!


நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11இலிருந்து 17 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதித்துறை மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணம், கடந்த 5 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைதான் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் ஓய்வு பெறுவதால் இந்த வழக்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, பதவிக்கால நீடிப்பு மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது எந்தவொரு தனிப்பட்ட நீதிபதிக்கோ அல்லது குறிப்பிட்ட நபருக்கோ வழங்கப்படும் சலுகையல்ல என்றும், மாறாக ஒட்டுமொத்த நீதித்துறையையும் வலுப்படுத்துவதற்கான ஒரு “அமைப்புமுறை மாற்றம்” என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், தனது தனிப்பட்ட பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை ஜனாதிபதி உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேவையானால் அந்த ஆபத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தனது பதவிக்கே ஆபத்து ஏற்பட்டாலும் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பொதுநலனுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் எந்தவொரு ஆபத்தையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், தனது பதவியை இழந்தாலும் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

tamilwin


 


Post a Comment

0 Comments