Ticker

6/recent/ticker-posts

சுரேஷ் சல்லேக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே பொறுப்பு – தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு


அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லேவுக்கு எதிராக மூன்றாவது தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறும், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.

“சல்லேவுக்கு நீதி – கலந்துரையாடல் மன்றம்” என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமைப்பின் பிரதிநிதிகள், சுரேஷ் சல்லே தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்தனர்.

மேலும் தாமதமின்றி சல்லேயை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என அக்குழு வலியுறுத்தியது.


 


Post a Comment

0 Comments