
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
பொலிவியா நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவு மற்றும் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அதிகளவில் டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை வாங்கும் நுகர்வோர்களுக்கு விலையை 2 மடங்காக அறிவித்துள்ளது பொலிவியா அரசு.
அதன்படி ஒரு லிட்டர் டீசல் இந்திய ரூபாய் மதிப்பில் 150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அந்நாட்டு அமைச்சர் ஃபெர்னாண்டோ அர்மயோ, அரசின் நிதிச் சுமையைக் குறைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் பங்களிப்பை அனுமதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments