Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் மனைவியைக் கொலை செய்த சந்தேகத்தில் கணவரும் இல்லப் பணிப்பெண்ணும் கைது


பாகிஸ்தானில் மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் ஓர் இல்லப் பணிப்பெண்ணின் உதவியுடன் மனைவியைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஹீனா ஜாவட் (Hina Javed) மாமியார் வீட்டில் இறந்து கிடந்தார்.

அவருக்கு வயது 45.

ஹீனாவின் உடலைக் கண்டுபிடித்த அவரது சகோதரர் சேல் ஜாவட் (Sail Javed) காவல்துறைக்குப் புகார் அளித்தார்.

ஹீனாவின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதை அடுத்து ஹீனாவின் கணவரையும் இல்லப் பணிப்பெண்ணையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

ஹீனாவுக்கும், அவரது கணவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு முன் கல்யாணம் நடந்தது.

ஹீனாவின் கணவர், ஃபைசால் அஸ்காருக்கு (Faisal Asghar) வயது 52.

அஸ்காரும் அவரது குடும்பத்தினரும் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஆனால் அஸ்காரின் குடும்பத்தினருக்கும் கொலையில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ஹீனாவின் சகோதரர் அதிகாரிகளிடம் சொன்னார்.

இந்தச் சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

seithi


 


Post a Comment

0 Comments