Ticker

6/recent/ticker-posts

கின்னஸ் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி!


தன்னை எதிர்த்து விளையாடிய வீரரை வெறும் 11 வினாடிகளில் வீழ்த்தி குத்துச்சண்டையில் கின்னஸ் சாதனை படைத்த தென்னாப்பிரிக்க வீரர், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர் ஜொலானி டெட்டே. 38 வயதான இவர் 2007-2008 ஆம் ஆண்டில் உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் பிளைவெயிட் பிரிவிலும், 2017 மற்றும் 2019இல் உலக குத்துச்சண்டை அமைப்பின் சார்பில் நடந்த போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டம் வென்று மிரட்டினார்.
இந்நிலையில், எம்தான்சேனே பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய டெட்டேவை முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகத் தெரிகிறது. இதில், டெட்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் இருந்த 27 வயது இளம்பெண் படுகாயமடைந்தார். 2017 ஆம் ஆண்டில் தன்னை எதிர்த்து விளையாடிய சிபோனிசோ கொன்யா என்பவரை வெறும் 11 வினாடிகளில் வீழ்த்தி கின்னஸ் சாதனை படைத்த டெட்டேவின் மரணம் குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments