
நியூசிலந்தில் உள்ளாட்சி மன்றக் கூட்டத்தில், குளியலறையில் இருந்து காணொளி வழியாக இணைந்த அரசியல்வாதியின் செயல் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பேசப்படுகிறது.
தெற்கு தீவில் உள்ள டனிடின் (Dunedin) நகர சபை உறுப்பினர் ஜோ கேலர் (Jo Galer), திங்கட்கிழமை நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில் இணையம்வழி பங்கேற்றார்.
அவரது பின்னணியில் துவைத்த துணிகள் தெளிவாகத் தெரிந்ததால், கூட்டத்தில் இருந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இதையடுத்து அங்கிருந்த மேயர், "உங்கள் கேமராவை கொஞ்சம் மாற்றுங்கள். உங்கள் துணிகள் தெரிகின்றன," என்று கூறினார். அதற்கு ஜோ கேலர், "என் துணிகளையும் என்னையும் பார்க்கிறீர்கள்," என்று பதிலளித்தார்.
உள்ளாட்சி நிர்வாக மாற்றம் குறித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, பின்னணியில் இருந்த ஒரு கதவுக்குப் பின்னால் அடையாளம் தெரியாத கருநிற உருவம் ஒன்று தோன்றியது. அதுவும் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
காணொளி YouTubeஇல் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து AFP செய்தி நிறுவனம் ஜோ கேலரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதற்கு முன் 2020ஆம் ஆண்டு, அப்போதைய நகர சபை உறுப்பினர் டேவிட் பென்சன்-போப் (David Benson-Pope), கோட் மட்டும் அணிந்துகொண்டு கால்சட்டை அணியாமல் காணொளிக் கூட்டத்தில் தோன்றி கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments