Ticker

6/recent/ticker-posts

தங்க வேட்டையால் மலைக்கும் ஆப்கான் மலைகள்


ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பதக்ஷான் (Badakhshan) மாநிலத்தில் மக்கள், கால்நடைகள் பயன்படுத்திய மலைப்பகுதிகளில் இப்போது ஏராளமான அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் இரவும் பகலும் இயங்குகின்றன.

காரணம்?

மாநிலத் தலைநகர் ஃபைஸாபாத்தில் (Faizabad) ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் தங்கம் தேடுகின்றனர்.

நாடு முழுவதிலுமுள்ள முதலீட்டாளர்களுக்காக இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

ஆனால் சுரங்கப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

ஆற்றங்கரையிலிருந்த புற்கள் மறைந்துவிட்டன. தூசியால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று புலம்புகின்றனர் விவசாயிகள்.

2021இல் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுரங்கத் துறையை விரிவுபடுத்தியுள்ளது. அரசாங்க வருவாயை அதிகரிப்பது அதன் நோக்கம்.

ஆயிரக்கணக்கானோர் கைகளாலும் தங்கம் எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அங்கு 112 கிலோகிராம் தங்கத்தை அரசாங்கம் சேகரித்தது. அவை கிட்டத்தட்ட கிராமுக்கு 118 அமெரிக்க டாலருக்கு விற்றது.

ஆனால் இவற்றால் உள்ளூர்வாசிகளுக்கு ஒரு பயனும் இல்லை; அதிகாரம் படைத்தவர்களே அனுபவிக்கின்றனர் என்று வட்டாரவாசிகள் வருந்துகின்றனர்.

seithi


 


Post a Comment

0 Comments