
ஹைதராபாத் ராமச்சந்திராபுரம் கோவிலில் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி சாயண்ணா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவில் கருவறையில் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ராமச்சந்திராபுரத்தில் உள்ள உள்ளூர் கோவில் ஒன்றின் கருவறை கதவு உள்ள தேவையில்லாமல் சாத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த பக்தர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு கதவை திறந்து பார்த்தபோது அந்த கோவில் பூசாரி சாயண்ணா (65) கருவறைக்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அந்த பூசாரியை வெளியில் இழுத்து ஆடை அணிய வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த ராமச்சந்திராபுரம் போலீசார் பூசாரி காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இதற்கு முன்னரும் அவர் இதேபோல் நடந்து கொண்டதாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பூசாரி சாயண்ணா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புனிதமான கோயில் கருவறையில் அந்த கோவில் பூசாரி சிறுமியுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதி பொது மக்களை கொதிப்படைய செய்துள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments