
6 வயது பக் இன நாய் 'ஜின்னி லூ' 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் அவலட்சணமான நாய் போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது.
அபூர்வமான பட்டத்தை வெல்வதற்காக விசித்திரமான அதேவேளை அன்பான தோற்றம்கொண்ட நாய்களின் அணிவகுப்புடன் இப்போட்டி இடம்பெற்றது.
தனித்துவமான தோற்றம்கொண்ட நாய்களை ஒன்றிணைத்து தனது 50ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் அவலட்சணமான நாய் போட்டியில், 6 வயதுடைய 'ஜின்னி லூ' எனும் பக் (Pug) இன நாய் வெற்றியீட்டியுள்ளது. சோனோமா-மரின் விவசாயச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 50ஆவது ஆண்டுக்கான உலகின் அவலட்சணமான நாய் போட்டி, கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவில் அமைந்துள்ள சோனோமா கவுண்டி கண்காட்சி மைதானத்தில் ஆகஸ்ட் 14ஆம் திகதி நடைபெற்றதாக People.com செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் அறியப்பட்ட இப்போட்டியில் விசித்திரமான அதேவேளை அழகான தோற்றம்கொண்ட நாய்கள் இப்பிரிவுக்காக அணிவகுத்தன. இப்போட்டியில் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்ட 'ஜின்னி லூ' நாயின் உரிமையாளரான மிச்செல் கிராடிக்கு (Michelle Grady), MUG ரூட் பீர் நிறுவனத்தால் 5,000 டாலர் (சுமார் 4,77,252.50 இலங்கை ரூபா / இந்திய ரூபா) பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments