
பூங்கொடி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்தாள்.
நாட்களும், மாதங்களும்,வருடங்களும் ஓடின.
இப்போது அவள் சந்தையின் ஓரத்தில் சிறிய பூக்கடை வைத்திருந்தாள்.
மறுநாள் அதிகாலை,மழைத்தூறலுடன்கடையைத் திறந்தாள்.
அந்த மங்கலான வெளிச்சத்தில் ஒரு நிழல் அவள் கடையில் விழுந்தது.
அது ஆதியா...?அல்லது வேறு யாரோ...?
அவள் மனதில் அவன் நினைவுகள்தான் நிறைந்திருந்தன.
யாரைப் பார்த்தாலும்,யாரின் நிழல் தெரிந்தாலும்,ஒரு நிமிடம்
“அது ஆதியா?” என்றே நினைப்பாள்.
“எங்கு போனான்?என்ன ஆனான்?என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை?”
என்ற கேள்விகள் அவள் மனதை வாட்டின.
அன்று காலை வழக்கம்போல பூங்கொடி வீட்டின் முன் அமர்ந்து பூமாலை கட்டிக்கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் வீட்டின் வாசலில் யாரோ வருவது போல காலடிச் சத்தம் கேட்டது. பூங்கொடி தலைநிமிர்ந்து பார்த்தாள்.
"பூங்கொடி!" என்ற அன்பான குரல்.
வாசலில் நின்றிருந்தவர்கள் வேறு யாருமல்ல... அவளின் உயிர்த்தோழிகள் மங்கை மற்றும் மலர்.
அவர்களைப் பார்த்தவுடன் பூங்கொடியின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது. இருவரையும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் அழைத்தாள்.
மூவரும் ஒன்றாக அமர்ந்து பழைய நினைவுகளையும், பள்ளி நாட்களையும், வாழ்க்கையில் நடந்த மாற்றங்களையும் பேசிக்கொண்டிருந்தனர். நேரம் சென்றதே தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து உரையாடல் ஆதியை நோக்கித் திரும்பியது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments