Ticker

6/recent/ticker-posts

11 வயதில் நட்ட முதல் மரம்... இன்று 26 மில்லியன் மரங்கள்


புகைமூட்டம் சூழ்ந்துள்ள டெல்லியில் 60 வயது சுவாமி பிரேம் பரிவர்த்தன் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

அவர் ‘Peepal Baba’ அதாவது ‘மரங்களின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அவர் மரங்களை நட்டு வருகிறார்.

11 வயதில் தனது பிறந்தநாளன்று அவர் முதல் மரக்கன்றை நட்டார்.

சிறுவயதில் தொடங்கிய அந்த ஆர்வம் பின்னர் பெரிய இயக்கமாக மாறியது.

அவர் நடத்திவரும் அமைப்பு இதுவரை 26 மில்லியன் மரங்களை நட்டுள்ளது; பாதுகாத்துள்ளது.

எத்தனை மரங்கள் நடப்பட்டுள்ளன என்பதைவிட, அவை தொடர்ந்து வளர்வதுதான் முக்கியம் என்கிறார் சுவாமி பிரேம்.

பல்கலைக்கழகப் படிப்புக்குப் பிறகு கல்வித்துறையில் வேலை செய்வதற்குப் பதிலாக, மரங்களை வளர்க்கும் பணியை அவர் தேர்ந்தெடுத்தார்.

மக்களை மரம் நட ஊக்குவிக்க ஸ்கூட்டரில் இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.

தனது குறிப்புகளின்படி, சுமார் 540,000 கிலோமீட்டர் பயணம் செய்ததாக அவர் கூறுகிறார்.

அது பூமியை 13 முறைக்கும் அதிகமாகச் சுற்றிவரும் தொலைவுக்குச் சமம்.

தற்போது மரங்களை நடுவதோடு, அவை வளரும் மண்ணைப் பாதுகாப்பதிலும் அவர் கவனம் செலுத்துகிறார்.

Instagramல் அவரை 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தொண்டூழியர்களின் உதவியுடனும் அவரது பணி தொடர்கிறது.

“பூமிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க எத்தனை மரங்கள் தேவையோ, அத்தனை மரங்களை நட வேண்டும்,” என்கிறார் அவர்.

seithi


 


Post a Comment

0 Comments