Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-127


ரெங்க்மாவுக்கு ஆண்மகன் பிறக்கப்போகும்  செய்தி கேட்ட மகிழ்ச்சிப் பிரவாகத்தில் புரோகோனிஷ் கிராமத்தவர்  நடுநிஷி வரை செரோக்கியின் மனைமுன்றலில் கும்மியடித்துக் கும்மாளமிட்டுவிட்டு  தத்தமது ஜாகைகளை நோக்கிச்  சென்று விட்டனர்!

செரோக்கி – ரெங்க்மா இருவரிடமும் இறுதியாக விடை 
பெற்றுக்கொண்டு தமது ஜாகை நோக்கிச் சென்ற ரெங்க்மாவின் தாய் -தந்தையர், அடுத்தநாள் விடியலின் போது விழித்தெழுந்து, வனப்பகுதி நோக்கிச் செல்ல முற்பட்டனர்.

ரெங்க்மாவின் தந்தையார் அடிக்கடி வனத்துக்குள் சென்று வேட்டையாடி வருபவராக இருந்தபோதிலும், தாயார் தனது ஜாகையைச் சுற்றி வந்து கொண்டிருப்பவளாக இருந் துள்ளாரே தவிர, எப்போதுமே அவள் வனத்துக்குள் சென்றது கிடையாது.

புரோகோனிஷ் கிராமத்தவர்களால் ‘குமாரி’ என்று செல்லமாக அழைக்கப்பட்டுவரும் தனது மகள் ரெங்க்மா உண்டாகியிருக்கின்றார். 

அவள் விரும்பிய பழங்களைத் தேடித் தனது கைப்பட பறித்துவர வேண்டுமென்ற நோக்கிலேயே அவளது தாயார் வனம் நோக்கிச் செல்ல முற்பட்டுள்ளாள்.

தனது வில்லைத் தோளில் சுமந்து கொண்டு கம்பீரமாக நடந்து கொண்டிருந்த  தன்  கணவரைப் பின் தொடர்ந்தவளாக  வட்டியொன்றைத் தனது இடையில் சொறுவிக்கொண்ட  ரெங்க்மாவின் தாயார் வனத்தை நோக்கிய தனது கன்னிப் பயணத்தை  மெல்ல ஆரம்பித்து வைக்கின்றார். 

ரெங்க்மா நீரில் மூழ்கி காப்பாற்றப்பட்டபோது, பெரியகல்லின் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் யோகியாரின் வேண்டுகோளுக்கமைய  வனப்பகுதி அருகாமையினூடாக ‘ஒரினோகோ’ ஆற்றங்கரை 
நோக்கிச் சென்றபோது, தூரத்தில் தெரிந்த வனத்தைப் பார்த்து பிரமிப்புடன் இரசித்துள்ள அவள், இப்போது அதற்குள் நுழையப்போவதை நினைத்து சற்று பீதி அடைந்துள்ளார் என்பதை அவளது  முகம் பிரதிபலித்தது!  

(தொடரும்)

 


Post a Comment

0 Comments