
குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல்.
பிறஉயிரைக் கொல்தல் அருளல்ல! வாழ்வில் அறமல்ல ஊன்தின்னல்! சொல்.
குறள் 255:
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு.
உண்பதில்லை ஊனென்ற கொள்கை மனிதநேயம்! உண்பவரைச் சூழ்ந்துவிடும் கேடு.
குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லாதுலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
இறைச்சியைத் தின்பதற்குக் கொல்வதில்லை என்றால் இறைச்சிவிற்க ஆளில்லை சாற்று..
குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின்.
இறைச்சியோ வேறோர் உடலேந்தும் புண்ணே! இதையுணர்ந்து உண்ணாமல் வாழ்.
குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
அறிவார்ந்த ஆன்றோர் உயிர்பிரிந்த மற்ற இறைச்சியை ஏற்கமாட்டார் கூறு.
(தொடரும்)
மதுரை பாபாராஜ்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments