
சின்னவளின் வெறுப்பு அவளது ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு.
சரி, இரவானது. எப்போதும் போல் இரவு உணவை முடித்துக் கொண்டு, பாட்டியிடம் கதை கேட்கும் ஆர்வத்தோடு அனைவரும் முற்றத்தில் அமர்ந்தார்கள். பாட்டியும் வெற்றிலைப் பையோடு அந்தத் திண்ணையிலே சாய்ந்து கொண்டார். இனிதே கதை ஆரம்பமாகப் போகிறது.
பாட்டி ஆரம்பித்தார்.
"அரச சபை கலைந்தது. குமரன் ஊருக்குப் போயாச்சு. கூடவே மருத்துவர் பேத்தியோடும் போய்விட்டார். அரண்மனைக்குள் மகாராணி உட்பட அனைவரும் ஓய்வு எடுக்கப் போயாச்சு. இவைதானே நேற்றைய கதை நிகழ்வு?" என்று பேத்தியிடம் கேட்டார்.
"ஆமாம் பாட்டி," என்றாள் லூசியா.
"சரி, அப்போ நான் ஆரம்பிக்கிறேன். கதையைக் கவனமாகக் கேளுங்க. நிறுத்தத்தை ஞாபகம் வைத்திருங்கள். மறுநாள் நான் கேட்டதும் முழிக்காமல் சொல்லணும்," என்றார் பாட்டி.
உடனே பேரன் கூறினான்.
"அதெல்லாம் ஞாபகம் இருக்கும் பாட்டி. நீங்க முதல்ல கதையைச் சொல்லுங்க."
"சரிடா என் செல்லப் பேராண்டி," என்று கூறி அவன் கன்னத்தைக் கிள்ளினார்.
அருகே இருந்த தன் புருஷனைப் பார்த்து, அவன் காதில் மட்டும் விழும் அளவு மெதுவாக முணுமுணுத்தாள் சின்ன மருமகள்.
"உங்க அம்மாவிடம் நாம் கதை கேட்பதும் போதும், பைத்தியமாக மாறுவதும் போதும். பெரிய பாரதிராஜா, பாக்கியராஜ் என்ற நினைப்பு!" என்றாள்.
உடனே அவளைப் பார்த்து முறைத்தான் அவன்.
இதைக் கவனித்த லூசியா சிரித்துக் கொண்டாள்.
"என்னடி, சும்மா சிரிக்கிறாள் இவள்?" என்று பாட்டி கேட்டதும், சின்னவளே உடனே வாய்திறந்து பதில் கொடுத்தாள்.
"இல்ல அத்த, அவள் ஏதோ ஒரு காமெடி போன்ல பார்த்து சிரிக்கிறாள். நீங்க ஆரம்பியுங்க கதையை."
என்றவள், லூசியாவைப் பார்த்து,
"அடியேய், கதை கேட்க வந்து எதற்குடி மொபைலை நோண்டுகிறாய்? தூக்கி அங்கிட்டு போடு," என்றவள், புருஷனைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள்.
பாவம் அவன்... அவளைக் காட்டிக் கொடுத்திட முடியாமல் விழித்தான்.
பாட்டி கதையைத் தொடங்கினார். அனைவரும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
முடிவு மேரி சொன்னது போலவும் இல்லை; சின்னவள் சொன்னது போலவும் இல்லை.
அப்படியென்றால் எப்படி முடிந்திருக்கும்?
(தொடரும்)
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





1 Comments
வேட்டையில் படிக்கும் போதுதான் என் கதை எனக்கு ஒரு புதுவிதமாக தோணுது நன்றிகள் அண்ணா 😊
ReplyDelete