
குறள் 269:
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு
வாட்டுகின்ற துன்பத்தைத் தாங்கும் உறுதிகொண்டோர் கூற்றையும் வெல்வார் நிமிர்ந்து.
குறள் 270:
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலாதவர்.
தவத்தில் சிலரும் தவிர்ப்பில் பலரும் அவனியில் உள்ளதன் போக்கால் அடக்கம் தவிர்ப்போர் பலரானார் இங்கு.
கூடா ஒழுக்கம்
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
வஞ்சக எண்ணங்கள் கொண்டோர் ஒழுக்கத்தை ஐம்பூதம் நம்முள் நகும்.
குறள் 272:
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின்.
தான்செய்தல் குற்றம் எனத்தெரிந்தும் செய்பவர்கள் பூண்டுள்ள வேடம் துறவு.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments