Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 13


இன்னா நாற்பது -23.

சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர் சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம்.

விளக்கம்:
  • மதிற் சுவர்கள் இல்லாத ஊரின் நுழைவு வாயிலை காப்பது துன்பமாகும். 
  • நீர் நிலைகளில் துணிகளைத் துவைத்தல் துன்பமாகும். 
  • பறைபோல் ஓங்கி ஒலியெழுப்பி. பிறரைப் பற்றி அவதூறு பேசுபவரின் சொற்கள் துன்பமாகும். 
  • புலன்களை அடக்க முடியாதவர்கள் இருக்கும் நோன்பு துன்பமாகும்.

இன்னா நாற்பது -24.

ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு.

விளக்கம்:
  • பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமாகும். 
  • தீய செயல்களைச் செய்து வருபவர்களுக்கிடையில் வாழ்வது துன்பமாகும். 
  • காம நோய் முற்றி உயிர் வாழ்வது துன்பமாகும். 
  • எல்லாவற்றிலும் தன்னையே முன்னிலைப் படுத்துபவர்களிடம் நட்போடு இருப்பது துன்பமாகும்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments