Ticker

6/recent/ticker-posts

சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி


சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் கிங்டாவோ துறைமுகத்தில் உள்ள பெய்காய் கப்பல் கட்டும் தளத்தில், லைபீரிய கொடியுடன் ஓஷன் மெலடி என்ற சரக்கு கப்பல் பராமரிப்பு, பழுது பார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்த கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர். கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மதியம் 2 மணிக்கு அணைத்தனர். 

இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி பலியாகி விட்டனர். 5 பேர் மாயமாகி உள்ளனர். 

இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் பிரதமர் லீ சியாங் ஆகியோர், மாயமானவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தவும், விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

nambikkai


 


Post a Comment

0 Comments