Ticker

6/recent/ticker-posts

இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?

சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (MUIS), சமயக் கல்விக்குச் செயற்கை நுண்ணறிவும் இணையத் தளங்களும் துணை புரியலாம் என்று கூறியிருக்கிறது.

எனினும் முதன்மை வளமாக அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று மன்றம் வலியுறுத்தியது.

இணையத்தில் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்படும் அபாயமும் பொய்யான போதனைகளும் இருப்பதை அது சுட்டியது.

குறிப்பாக, சிக்கலான விவகாரங்களில் இணையத்தைச் சார்ந்திருக்கக்கூடாது என்று மன்றம் சொன்னது.

சமய வழிகாட்டுதலுக்குத் தகுதிபெற்ற சமய போதகர்கள் அல்லது நம்பகமான வளங்களை நாட வேண்டும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முஹம்மது கூறினார்.

செயற்கை நுண்ணறிவின் பயன் குறித்து அணுக்கமாக ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சமய போதகர்கள் பலர் செயற்கை நுண்ணறிவையும் புதிய மின்னிலக்கச் சாதனங்களையும் பயன்படுத்தப் பயிற்சி பெறுவதையும் ஸாக்கி சுட்டினார்.

nambikkai


 


Post a Comment

0 Comments