Ticker

6/recent/ticker-posts

சீனாவில் தயாரிக்கப்படும் பாரம்பரிய அலங்கார மின் விளக்குகள்; வியந்த பார்வையாளர்கள்!


சீனாவில் தயாரிக்கப்படும் பாரம்பரிய அலங்கார மின் விளக்குகள்; வியந்த பார்வையாளர்கள்!

சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் பாரம்பரிய அலங்கார மின் விளக்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிகோங் நகரில் கைவினைக் கலைஞர்களால் அலங்கார மின் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலும், தொன்மையை எடுத்துரைக்கும் வகையிலும் தயாரிக்கப்படும் மின் விளக்குகள் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

பாட்டில்கள், பீங்கான் கழிவுகள், பழைய சிடி-க்கள் மூலம் தயாரிக்கப்படும் மின் விளக்குகளால் ஜிகோங் நகரம் சீனாவின் விளக்குத் தலைநகரமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 19 நாடுகளில் உள்ள 85 நகரங்களில் நடைபெற்ற முக்கியக் கண்காட்சிகளை ஜிகோங் மின் விளக்குகள் ஒளிரச் செய்துள்ளதாக சீன கைவினைக் கலைஞர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஓராண்டில் மட்டும் 755 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

news18


 


Post a Comment

0 Comments