
கிளிநொச்சி, உத்திரபுரம் சிவநகர் பகுதியில் தாத்தா செலுத்திய கெப் வாகனத்தின் சில்லில் நசியுண்டு, ஒன்றரை வயதுடைய சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி வீட்டிற்குள் இருந்த நிலையில், அவரது தாத்தா கெப் வாகனத்தை இயக்கிய போது தாத்தாவை நோக்கி சிறுமி ஓடிச் சென்றதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக கெப் வாகனத்தின் கீழ் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒன்றரை வயதுடைய ரூபன் அனாமிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments