
சென்ற வார தொடரில் பிறவி இதய நோய் பற்றி பார்த்து வந்தோம். அதன் தொடராக அதன் காரணங்களையும் அதை களைவது தொடர்பான தகவல்களை இந்த வாரம் தொடரில் பார்க்கலாம்.

தற்போதைய நூற்றாண்டில் நமது வாழ்க்கை முறை முற்றிலும் இயந்திரத்தனமாக மாறிவிட்டது. இதனால் உடல் உழைப்பு என்பது குறைந்த இயந்திரங்களின் பயன்பாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது ஒரு உயிர் உருவாக முதல் முழு வளர்ச்சியடைந்து உலகிற்கு வெளிவருவது வரை அனுப்பி இருக்க வேண்டியதான ஒரு நிலைமை மாறிவிட்டது எனலாம்.
சரி இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்???
எவ்வாறெனில் அதன் காரணங்களை முதலில் கண்டறிந்து, அதைப்பற்றியான அறிவை வளர்த்துக் கொள்ளும் பொழுது இந்த அசாதாரண நிலையை எதிர்கொள்ள முடியும்.
சரி நாம் தலைப்பை தொடரலாம்.......
பிறவி இதய நோய் என்பது பிறக்கும் போது இருக்கும் பல்வேறு இதய குறைபாடுகள் அல்லது அசாதாரணங்களைக் குறிக்கிறது.
பிறவி இதய நோயைத் தடுப்பது (CHD) ஒரு சிக்கலான தலைப்பாகும், ஏனெனில் இது முதன்மையாக மரபணு காரணிகளை உள்ளடக்கியது .

மரபணு ஆலோசனை: CHD அல்லது பிற ஆபத்து காரணிகளின் குடும்ப வரலாறு இருந்தால், உங்கள் குழந்தைக்கு பிறவி இதயக் குறைபாடுகளைக் கடத்தும் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு ஆலோசனையைக் கவனியுங்கள்.
டெரடோஜென்களைத் தவிர்ப்பது: அப்படி என்றால் ஒரு குழந்தை உருவாகும் பொழுது அந்த உருவாக்கத்தில் தலையிட்டு அதன் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது உதாரணமாக அடிக்கடி குழந்தை வளர்ச்சியை ஸ்கேன் நிழல் படம் எடுப்பதின் மூலமாகவும் அதிகமான மருந்துகள் உட்கொள்வதாலும் அதன் மரபணுக்களில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றது.
கர்ப்ப காலத்தில் மது, புகையிலை மற்றும் சில மருந்துகள் போன்ற CHD ஆபத்தை அதிகரிக்கக்கூடிய பொருட்களின் உபயோகத்தை குறைக்கவும்.
நாள்பட்ட சுகாதார நிலைமைகளை நிர்வகித்தல்: உங்களுக்கு நீரிழிவு போன்ற நாள்பட்ட சுகாதார நிலைகள் இருந்தால், கர்ப்ப காலத்தில் அவற்றை திறம்பட நிர்வகிப்பது முக்கியம்.
ஃபோலிக் அமிலம்: கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வது சில இதய குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்க உதவும். போலிக் அமில மருந்துகளை நேரடியாக உட்கொள்ளாமல் இயற்கையான வழிமுறைகளின் படி செவ்வாழை பீட்ரூட் உலர்ந்த பழங்கள் உதாரணமாக அத்திப்பழம் திராட்சை போன்றவற்றை பேரிச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்வதின் மூலமாக உடலில் கருவுற்றிருக்கும் பொழுது போலிக் ஆசிடின் போலிக் அமிலத்தின் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை: சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும், இது மறைமுகமாக கர்ப்பத்தில் ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தை குறைக்கலாம். அறிவு த்திருக்கும் மிதமான உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம் இதுவே நமது நரம்பு மண்டலங்களையும் தசை பகுதிகளையும் தளர்வாக வைத்திருக்க உதவும்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது சாப்பிடும் உணவுகள்

கர்ப்பமாக இருக்கும் பொழுது முதல் மூன்று மாதங்களில் சாப்பிடும் உணவுகள் எளிதாக செரிக்க கூடிய கஞ்சி இளநீர் வெள்ளரிப்பிஞ்சு எலுமிச்சை மற்றும் கீரைகள் பழங்கள் போன்றவற்றை அதிகமான அளவில் கொள்வது மிகவும் நல்லது
மேலும் கர்ப்பிணிகளுக்கு எளிதில் நோய் அணுகாதிருக்க வைட்டமின் சி மிகவும் அவசியம் அதற்கு நெல்லிக்காய் ஒரு அருமருந்து ஒரு நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சீக்கு சமமாக நீங்கள் ஆரஞ்சு அல்லது ஆப்பிள் உண்ண வேண்டும் என்று சொன்னால் ஒரு ஆறு கிலோ சாப்பிட வேண்டும் நம்ப முடியாவிட்டாலும் இதுவே உண்மை
தாயிருக்கும் சிசுவிற்கும் போதுமான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலமாக பல நோய்களை நாம் வருமுன் காப்போம்.
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்கும்வரை விடைபெறுவது

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).

.gif)



0 Comments