
பிரிட்டிஷ் விமானப் படையின் (RAF) பயிற்சி விமானம் தரையில் மோதித் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
அது Hawk T2 ரக அதிவேக போர் விமானம்.
வேல்ஸின் (Wales) ஆங்கிள்சி (Anglesey) தீவில் RAF Valley தளத்திலிருந்து விமானம் புறப்பட்டது.
அதில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் விபத்துக்குமுன் விமானத்திலிருந்து வான்குடையில் குதித்தனர்.
ஒருவர் பயிற்சி விமானி; மற்றொருவர் அனுபவசாலி.
இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அவர்கள் நலமாக இருக்கின்றனர்; விரைவில் உடல்நிலை சீராகும் என்று பிரிட்டிஷ் விமானப்படை தெரிவித்தது.
சம்பவம் நேற்று முன்தினம் (23 செப்டம்பர்) நடந்தது.
முன்னெச்சரிக்கையாக Hawk ரக விமானம் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பிரிட்டிஷ் விமானப் படை விபத்தை விசாரிக்கிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments