
போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து இளம் தலைமுறையை மீட்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் 2030 ஆம் ஆண்டு வரையான தேசிய மூலோபாயத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவரும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய சபையின் உறுப்பினருமான சிரேஷ்ட விரிவுரையாளர் விஜித ரோஹான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய நடவடிக்கை – பிரதான அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்றது. இதன்போதே அவர் இத்தகவலை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;
குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் கிராமங்களுக்குள் மோதல்கள் ஏற்படுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக போதைப்பொருள் பாவனை மாறியுள்ளது. நகரம், கிராமம் மாத்திரமன்றி பல்கலைக்கழகங்கள் வரையிலும் கல்வியறிவு பெற்றவர்கள் மற்றும் கல்வியறிவற்றவர்கள் என பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இது தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் குடும்பங்களின் அமைதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.
இந்த சவாலை எதிர்கொள்வதற்காக ‘முழு நாடும் ஒன்றாக’ கட்டமைப்பிற்குள் அரச நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பல மாதங்களாக கலந்துரையாடல் நடத்தப்பட்டு தேசிய மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவின் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 2030 ஆம் ஆண்டு வரையான நீண்டகால மூலோபாயத் திட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகமும் செயற்பூர்வமாக இணைந்துள்ளன.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களையும் அதற்கு ஆளாகக்கூடிய இளம் தலைமுறையினரையும் அதிலிருந்து மீட்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண் கைதிகளுடன் தங்கியுள்ள 05 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 30 தாய்மார்களும் சுமார் 40 குழந்தைகளும் உள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதற்காக கொழும்பு மாவட்டத்தின் தேசிய ஒருமைப்பாட்டு அதிகாரிகள் ஊடாக முன்பள்ளி கல்வியில் அனுபவமுள்ள 15 ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு, பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் வாரத்தில் 05 நாட்களும் நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்கள் வீதம் முன்பள்ளிக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் சிறைச்சாலைக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
thinakaran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments