
பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தவெக மற்றும் காங்கிரஸ் இடையே காரசார கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளனர்.
கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்ட தவெக, 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்ததை அடுத்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
முதல் தேர்தலிலேயே வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையே ஒரு கணம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இந்த சூழலில்தான், "இன்றைய முதல்வர் விஜய்... நாளைய பிரதமர்..." என்ற முழக்கத்தை தவெக அமைச்சர்கள் எழுப்பி வருகின்றனர்.
அமைச்சர்களின் இந்த முழக்கம் தவெக தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ரசிக்கவில்லை. முதலமைச்சர் விஜய்தான் அடுத்த பிரதமர் எனக் கூறுவது ஒரு தேர்தல் யுக்தி என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்த நிலையில், ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவது காலத்தின் கட்டாயம் என்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா.
இதே கருத்தை அமைச்சர் விஸ்வநாதனும் முன்மொழிகிறார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று அமைச்சரவையில் இருந்தே வெளியேறுவோம் என்கிறார் அமைச்சர் ராஜேஷ்குமார்.
மறுபுறம், அடுத்த பிரதமர் யார் என கருத்துக் கணிப்பு நடத்திய ’C Voter’ நிறுவனம், மோடி முதலிடத்திலும், ராகுல் காந்தி 2ஆவது இடத்தில் இருப்பதாகவும், மக்களின் அடுத்த தேர்வு விஜய்தான் என்றும் முடிவுகளை வெளியிட்டிருந்தது. இதை ’போலி சர்வே’ என எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், சிங்கம், யானை, நரி என குட்டிக் கதையை குறிப்பிட்டு, நரியின் தந்திரத்தை நம்பி நண்பனை சந்தேகிப்பதுதான் போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments