
கம்பேக் கொடுக்க தயாராகும் சிஎஸ்கே
தொடர்ந்து மூன்று ஐபிஎல் சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாத நிலையில், 2027 ஐபிஎல் தொடரில் ஒரு தரமான கம்பேக்கை கொடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் முதல்படியாக பல ஆண்டுகளாக பயிர்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளேமிங்கை நீக்கி புதிய பயிற்சியாளரை தேடி வந்தது.
இந்த நிலையில், புது பயிற்சியாளரை சிஎஸ்கே கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தலைமை பயிற்சியாளராக வர வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் இந்திய வீரர் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டாம் என சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாம்.
அதனால் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கனை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கொண்டு வரை சிஎஸ்கே முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பயிற்சியாளர் அனுபவம் இல்லாவிட்டாலும் அவரது கேப்டன்சி அனுபவத்தை சிஎஸ்கே பார்க்கிறதாம்.
சிஎஸ்கே நிர்வாகம் மோர்கனை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அவர் ஆண்டுக்கு ரூ. 20 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே ரூ. 15 கோடி வரை தர தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
மோர்கன் நியமனம் உறுதியான பிறகு, 2027 சீசனுக்கன கேப்டன் குறித்த முடிவை சிஎஸ்கே அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் பெயர்ச்கள் அடிபட்டாலும், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கும் கேப்டன் கொடுக்க சிஎஸ்கே யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments