Ticker

6/recent/ticker-posts

சுறாமீன் சுவையை மிஞ்சும் பாறை மீன் புட்டு... வெறும் 10 நிமிஷம் போதும்


சுறா மீன் புட்டை மிஞ்சும் வகையில் பாறை மீன் புட்டு எவ்வாறு சமைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மீன்

அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகம் இருக்கும் மீனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றோம்.

குழம்பு, வறுவல், சைனிஸ் வகைகள் என செய்து சாப்பிடும் நமக்கு புட்டு என்றாலே சுறா மீன் தான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு சுறா மீன் புட்டு அனைவருக்கும் பரிட்சையமான பெயராக இருக்கின்றது.

தற்போது சுறா மீன் புட்டை மிஞ்சும் வகையில் பாறை மீனில் புட்டு செய்யலாம். சுறா மீன் விலை அதிகமாக உள்ள நிலையில், பாறை மீன் விலை சற்று குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில் பாறை மீன் புட்டு எவ்வாறு சமைப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பாறை மீன் - 1 கிலோ
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
முட்டை - 4 
உப்பு - தேவையான அளவு
மிளகுதூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
வெள்ளைப்பூண்டு - 6 பல் (இடித்துக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

சுறாமீன் சுவையை மிஞ்சும் பாறை மீன் புட்டு... வெறும் 10 நிமிஷம் போதும் | Rockfish Pudding Tastes Better Than Shark Fish

செய்முறை

முதலில் பாறை மீனை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு இவற்றினை சேர்த்து பிரட்டி, இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து ஒரு 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

அவித்து எடுத்த மீனை சற்று ஆற வைத்து மீனின் முள்ளை தனியாக எடுத்து நன்கு உதிரி உதிரியாக வைத்துக் கொள்ளவும்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதில் சீரகம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்பு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, அதனுடன் அவித்து வைத்துள்ள மீனை சேர்க்கவும். பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறிவிட்டு, தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டினால் பாறைமீன் புட்டு தயார்.

manithan


 


Post a Comment

0 Comments