Ticker

6/recent/ticker-posts

பூக்காரியின் பூக்கடை-14


மறுநாள் மாலை...

மல்லிகாவின் வீட்டிற்கு அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர்.

ஆதி, கதிர், திரு, மங்கை, மலர் என ஐவரும் மல்லிகாவின் அழைப்பை ஏற்று வந்திருந்தனர்.

கதிர் வரும்போது, மல்லிகாவின் பாட்டிக்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை வாங்கி வந்தார்.

மலரும் இனிப்புகளும் பழங்களும் வாங்கி வந்தாள்.

அனைவரையும் அன்புடன் வரவேற்ற மல்லிகா,

"முதலில் அனைவரும் சாப்பிடுங்கள். பிறகு அமைதியாகப் பேசலாம்," என்றாள்.

அவள் அன்புடன் சமைத்திருந்த உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

உணவு முடிந்ததும், வீட்டின் அருகிலிருந்த பெரிய மரத்தின் நிழலில் வட்டமாக அமர்ந்தனர்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்த மல்லிகா, ஆதியை நோக்கி,

"ஆதி... பூங்கொடியைப் பற்றி உனக்குத் தெரிந்த உண்மையை முதலில் நீயே சொல்லு," என்றாள்.

ஆதி ஆழமாக மூச்சை இழுத்தான்.

பல வருடங்களாக மனதில் பூட்டி வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் அவன் கண்முன் வந்தன.

பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினான்.

"பூங்கொடிக்குத் திருமணம் ஆனதும், அவளுக்குப் பிள்ளைகள் இருப்பதும் உங்களுக்குத் தெரியும்..."

அவன் ஒரு கணம் அமைதியாக நின்றான்.

பிறகு கனத்த மனதுடன் சொன்னான்...

"ஆனால்... அவள் கணவரை இழந்த விதவை என்பது... உங்களில் யாருக்கும் தெரியாது."

அந்த வார்த்தையைக் கேட்டவுடன் மங்கை, மலர், திரு, கதிர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அவர்களால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை...

(தொடரும்)


 


Post a Comment

0 Comments