
இன்னா நாற்பது - 27
பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க் களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல்.
விளக்கம்:
- பெருமைக்கு உடையவர்களைச் சிறுமைப் படுத்துவது துன்பமாகும்.
- உரிமையுள்ளவர்களிடம் இருந்து அவர்களது உடமையை பறித்துக் கொள்வது துன்பமாகும்.
- செல்வமில்லாதவரின் அழகு துன்பமாகும்.
- இளமையில் முதுமை துன்பமாகும்.
இன்னா நாற்பது - 28.
கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல்.
விளக்கம்:
- பயிற்சி எடுத்துக் கொள்ளாதவனை சுமந்து செல்வது கர்வமுள்ள குதிரைக்கு துன்பமாகும்.
- கல்வி அறிவு இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாகும்.
- வசதியில்லாதவன் வாயிலிருந்து வரும் நயமான சொல் துன்பமாகும்.
- கற்றோர் நிறைந்த அவையில் கல்லாதவன் சொல்லும் சொல் துன்பமாகும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments