Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 18


இன்னா நாற்பது - 33.

கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு.

விளக்கம்:
  • குடிகாரன் போதையில் கொடுக்கும் வாக்குறுதி துன்பமாகும். 
  • முட்கள் நிறைந்த காட்டில் நடைப் பயணம் போவது துன்பமாகும். 
  • வெள்ளத்தில் சிக்கியிருக்கும் விலங்கினங்களைக் காப்பாற்றாமல் இருப்பது துன்பமாகும். 
  • கள்ள எண்ணம் கொண்டவர்களுன் தொடர்பு வைத்திருப்பது துன்பமாகும்.

இன்னா நாற்பது - 34. 

ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த லின்னா
விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு.

விளக்கம்:
  • நல்லொழுக்கம் இல்லாதவர்களுடன் வைத்துள்ள தொடர்பு துன்பமாகும். 
  • அறிவு புகட்டும் நூல்களை படிக்க ஆர்வம் இல்லாமல் இருப்பது துன்பமாகும். 
  • மோசமான தொழில்கள் செய்பவர்களோடு வைத்துள்ள நட்பு  துன்பமாகும். 
  • நல்லவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கும் இடங்களுக்குச் செல்வது துன்பமாகும்.
(தொடரும்)

 


Post a Comment

0 Comments