
தேவையான பொருட்கள்
வறுத்த தவிட்டு அரிசி மாவு – 1 கப்
வறுத்த கேழ்வரகு மாவு – 1 கப்
வறுத்த ஆட்டா மாவு – 1 கப்
வறுத்த கோதுமை மாவு – 1 கப்
வறுத்த கொண்டைக்கடலை மாவு – 1 கப்
வறுத்த சோள விதை பொடி – 1 கப்
வறுத்த கொள்ளு மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப் பூ – தேவையான அளவு

செய்முறை
மேற்கண்ட அனைத்து மாவுகளையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து தேங்காய்ப் பூவுடன் பிட்டு பதத்திற்கு குழைத்துக் கொள்ளவும்.
பிட்டுக் குழாயில் மாவை நிரப்பும் போது இடையிடையே தேங்காய்ப் பூ சேர்த்து அடுக்கவும். இளம் தேங்காய்ப் பூ பயன்படுத்தினால் சுவை மேலும் சிறப்பாக இருக்கும்.
சுமார் 20 நிமிடங்கள் அவித்து இறக்கவும்.
சிறப்பு குறிப்பு:
இந்தத் தானியப் பிட்டு சத்து நிறைந்தது. காரமான கறி, சம்பல் போன்றவற்றுடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும். பாரம்பரிய சுவையுடன் ஆரோக்கியத்தையும் தரும் உணவாகும்.
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments