Ticker

6/recent/ticker-posts

யோஷிதவுக்கு எதிரான வழக்கு நவ. 3ஆம் திகதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இரண்டாவது பிரதிவாதியான டெய்சி போரஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்காக ஆஜரான சட்டத்தரணி அனில் சில்வா, அவரது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துகளை பரிசீலித்த நீதிபதி, வழக்கை நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.சுமார் 5.7 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக குற்றம் சுமத்தி யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thinakaran


 


Post a Comment

0 Comments